காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு
By DIN | Published On : 02nd January 2023 08:51 AM | Last Updated : 02nd January 2023 08:51 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் பரமபதவாசல் திறப்பு.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயிலில் பரமபத வாசல் திறப்பு விழா நடைபெற்றது.
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், பழமையான வரலாற்று சிறப்பும் உடையது காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோயில். இத் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு திங்கள்கிழமை பரமபதவாசல் திறப்பு விழா நடைபெற்றது. மூலவர் வைகுண்ட பெருமாள் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார், உற்சவர் கருட வாகனத்தில் அலங்காரமாகி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்தார்.
சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா. ஆர் த்தி, எஸ் பி .எம் சுதாகர், காஞ்சிபுரம் மேயர் மகாலட்சுமி யுவராஜ், காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கனிமொழி, அறநிலையத்துறையின் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் முத்துரத்தினவேலு, ஆய்வாளர் பிரித்திகா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
ஏடிஎஸ்பிக்கள் வினோத் சாந்தாராம், சந்திரசேகரன், பாலகுமாரன் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பூவழகி தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்