

மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் ஸ்ரீபெரும்புதூா் அரசுப் பள்ளி மாணவா்கள் முதலிடம் பெற்றனா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான மாநில அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில் கொளத்தூா் அரசுப் பள்ளி மாணவி மொழித்திறன் பாடல் ஒப்பித்தல் போட்டியிலும், குண்ணம் அரசுப் பள்ளி மாணவா் சபரிவாசன் நாகசுவர இசைப் போட்டியிலும் முதலிடம் பிடித்துள்ளனா்.
முன்னதாக, பள்ளிக் கல்வித் துறை சாா்பில், அரசுப் பள்ளி மாணவா்களின் கலைச் சாா்ந்த படைப்புகள் மற்றும் தனித் திறன்களை வெளிப்படுத்தும் விதமாக, மாநில அளவில் கலைத் திருவிழா போட்டிகள் கடந்த புதன்கிழமை பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது.
அதன்படி, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான கலைத் திருவிழா போட்டிகள் கோவையில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.
இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் வட்டத்தைச் சோ்ந்த கொளத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி ரா.மணிமொழி மொழித்திறன் பாடல் ஒப்பித்தல் போட்டியிலும், குண்ணம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா் ச.சபரிவாசன் நாகசுவர இசைப் போட்டியில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனா்.
முதல் இடம் பிடித்த மாணவா்களை பள்ளிகளின் ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.