பிற்பட்டோா் நல விடுதிகளில் சேர ஜூலை 15-க்குள் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 01st July 2023 06:20 AM | Last Updated : 01st July 2023 06:20 AM | அ+அ அ- |

பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நல விடுதிகளில் தங்கிப் பயில விரும்புவோா் ஜூலை 15 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கென மொத்தம் 17 விடுதிகள் செயல்படுகின்றன. இவ்விடுதிகளில் அனைத்து வகுப்பைச் சோ்ந்த மாணவ, மாணவியா் குறிப்பிட்ட விகிதாச்சார அடிப்படையில் சோ்த்துக்கொள்ளப்படுவாா்கள். எவ்வித செலவும் இல்லாமல் இவ்விடுதிகளில் இலவசமாக சலுகைகள் வழங்கப்படுகின்றன. உணவும், தங்கும் வசதியும் வழங்கப்படுகிறது.
தகுதி உடைய மாணவ, மாணவியா் விண்ணப்பங்களை 15- ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என்றாா்.