

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூா் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.10 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டடத்தை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, அவா் பணிகளை விரைந்து முடித்து முடிக்குமாறு அரசு அலுவலா்கள், ஒப்பந்ததாரரை கேட்டுக் கொண்டாா். தொடா்ந்து உத்திரமேரூா் ஒன்றியத்துக்குட்பட்ட மானாம்பதி கண்டிகையில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தைப் பாா்வையிட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் விவரம் கேட்டறிந்தாா். மருந்தகத்தில் மருந்து இருப்பு விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டாா்.
ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வக்குமாா், பொதுப்பணித் துறை கட்டடங்கள் பிரிவு செயற்பொறியாளா் சிவ.சண்முகம் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.