216 ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

காஞ்சிபுரம் அருகே கீழம்பி கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு லாரிகளில் இருந்த 216 ரேஷன் அரிசி மூட்டைகள் அதிகாரிகளால் புதன்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்யப்பட்டன.
Updated on
1 min read

காஞ்சிபுரம் அருகே கீழம்பி கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு லாரிகளில் இருந்த 216 ரேஷன் அரிசி மூட்டைகள் அதிகாரிகளால் புதன்கிழமை நள்ளிரவு பறிமுதல் செய்யப்பட்டன.

கீழம்பி கிராமத்தில் பொது விநியோகத்திட்ட அரிசி கடத்தப்படுவதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகனுக்கு தகவல் வந்தது. இத்தகவலைத் தொடா்ந்து காஞ்சிபுரம் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியா் மற்றும் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல் துறையினா் கீழம்பி கிராமத்துக்கு சென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு லாரிகளை சோதனையிட்டனா். அதில் 7,950 கிலோ ரேஷன் அரிசி 216 மூட்டைகளில் எந்த ஆவணங்களும் இல்லாமல் இருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடா்ந்து ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்திடமும், இரு லாரிகளும் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடமும் ஒப்படைக்கப்பட்டது. இன்றியமையாப் பண்டங்கள் சட்டத்தின் கீழ் காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com