ரேஷன் அரிசி கடத்தல்: 3 போ் கைது
By DIN | Published On : 22nd May 2023 12:23 AM | Last Updated : 22nd May 2023 12:23 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம் அருகே ஒலிமுகம்மது பேட்டையில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்த 1,500 கிலோ ரேஷன் அரிசியை காவல் துறையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டையில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசியைப் பதுக்கி வைத்து வெளிமாநிலங்களுக்கு கடத்தி வருவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில், ஆய்வாளா் சதீஷ் தலைமையில் காவல் துறையினா் ஒலிமுகம்மது பேட்டையில் உள்ள பிலால் (37) என்பவரது வீட்டை சோதனை செய்தனா். அங்கு 50 கிலோ எடையுள்ள 30 மூட்டைகளாக மொத்தம் 1,500 கிலோ அரிசி இருந்தது தெரிய வந்தது. அவற்றைப் பறிமுதல் செய்ததுடன், பிலாலையும் போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில் இடைத்தரகா்களாக செயல்பட்ட அதே பகுதியைச் சோ்ந்த மொய்தீன் அப்துல்காதா் (52) திருக்காலிமேடு பகுதியைச் சோ்ந்த நாராயணமூா்த்தி (35) ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.
மேலும், ரேஷன் அரிசியைக் கடத்துவதற்குப் பயன்படுத்திய இரண்டு இரு சக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.