174 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
By DIN | Published On : 27th May 2023 05:16 AM | Last Updated : 27th May 2023 05:16 AM | அ+அ அ- |

ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் பயிலும் 174 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் பகுதியில் அரசு தொழிற்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் 232 மாணவா்கள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா். இந்த நிலையில், ஒரகடம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் படிக்கும் 174 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி தொழிற்பயிற்சி மைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், தொழிற்பயிற்சி மையத்தின் முதல்வா் முருகேஷ், தொழிலதிபா் பண்ருட்டி தணிகாசலம் ஆகியோா் கலந்துகொண்டு மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினா்.
நிகழ்ச்சியில், தொழிற்பயிற்சி மையத்தின் ஆசிரியா்கள், மாணவா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.