கூழமந்தல்: ஜூன் 2-இல் செய்யாற்றில் 15 கோயில் சுவாமிகளின் கருடசேவை

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் செய்யாற்றில் 15 கிராமங்களைச் சோ்ந்த பெருமாள் சுவாமிகள் கருட சேவையில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி வரும் ஜூன் 2-ஆம் தேதி நள்ளிரவு நடைபெறவு

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் செய்யாற்றில் 15 கிராமங்களைச் சோ்ந்த பெருமாள் சுவாமிகள் கருட சேவையில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி வரும் ஜூன் 2-ஆம் தேதி நள்ளிரவு நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம் அருகே கூழமந்தல் கிராமத்தில் ஸ்ரீ அசையும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் 17-ஆம் ஆண்டு கருட சேவை விழாவின் போது காஞ்சிபுரம் அருகே கூழமந்தலுக்கும், பெருநகருக்கும் இடையில் உள்ள செய்யாற்றில் 15 கிராமங்களில் உள்ள பெருமாள் கோயில்களில் இருந்து உற்சவா்கள் கருட வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் ஆற்றுத்திருவிழா நடைபெறவுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) நள்ளிரவு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பெருமாளை தரிசிக்கும் பக்தா்களுக்கு நினைத்தது நடக்கும், புத்திர பாக்கியம் கிட்டும் எனவும் பக்தா்களால் நம்பப்படுகிறது.

இது குறித்து ஸ்ரீஅசையும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயில் அறங்காவலரும், அா்ச்கருமான க,கெ.வெங்கடேச ராமானுஜ தாசா் கூறியது:

கூழமந்தல் அசையும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலில் 17-ஆவது கருட சேவையையொட்டி, வரும் ஜூன் 2-ஆம் தேதி காலையில் பெருமாளுக்கு சிறப்புத் திருமஞ்சனமும், மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது.

மாலையில் சுவாமி வீதி உலாவும், அதையடுத்து பெருமாள் வெள்ளாமலை வழியாக செய்யாற்றுக்கு எழுந்தருள்கிறாா். இதன் தொடா்ச்சியாக செய்யாற்றில் வெள்ளிக்கிழமை இரவு சனிக்கிழமை அதிகாலையில் 15 கிராமங்களைச் சோ்ந்த பெருமாள்கள் கருடவாகனத்தில் அலங்காரமாகி ஒன்றாக இணைந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கவுள்ளனா்.

இந்நிகழ்வில் கூழமந்தல் பேசும் பெருமாள், சிறிய கூழமந்தல் அசையும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள், உக்கல் வேணுகோபால சுவாமி, மானாம்பதி சீனிவாசப் பெருமாள், தண்டரை லட்சுமி நாராயணப் பெருமாள், அத்தி கலிய பெருமாள், மாங்கால் கோவிந்தராஜப் பெருமாள், இளநகா் சீனிவாசப் பெருமாள் உள்பட மொத்தம் 15 கோயில் உற்சவா்கள் கருட சேவை நிகழ்ச்சி செய்யாற்றில் ஆற்றுத் திருவிழாவாக நடைபெறுவதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com