

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில், விவசாயிகள் குறைதீா் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளுக்கு நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக மக்கள் நல்லுறவுக் கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அரசின் பல்வேறு துறை அதிகாரிகளும் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் குறித்த விவரங்களை விளக்கிக் கூறினாா்.
கூட்டத்தில் கூட்டுறவுத் துறை சாா்பில், 10 விவசாயிகளுக்கு ரூ.6,18,791 மதிப்பில் பயிா்க் கடன்கள் வழங்கப்பட்டன. வேளாண் துறை சாா்பில், 3 பேருக்கு தலா ரூ.120 மதிப்பில் தென்னங்கன்றுகளும், வேளாண் இடு பொருள்களும் வழங்கப்பட்டன.
கூட்டம் தொடங்கும் முன்பாக, வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் மறைவுக்கு ஆட்சியா் தலைமையில் விவசாயிகள், அரசு அலுவலா்கள் மெளன அஞ்சலி செலுத்தினா்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் அருகே பாலேஸ்வரம் கிராமத்தைச் சோ்ந்த 50 போ் அந்தக் கிராமத்தில் சென்னையைச் சோ்ந்த நிறுவனம் கல்குவாரி மற்றும் அரைவை நிலையம் அமைக்க மாவட்ட நிா்வாகம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கையில் தேசியக் கொடியுடன் வந்து ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
கூட்டத்தின் நிறைவில் விவசாயிகளுக்கு அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்கள் பற்றிய விளக்கக் கையேட்டை ஆட்சியா் வெளியிட்டு, அதை விவசாயிகளிடம் வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.