காஞ்சிபுரத்தில் குழந்தைகளுக்கு எழுத்தறிவித்தல் நிகழ்வு
By DIN | Published On : 25th October 2023 05:49 AM | Last Updated : 25th October 2023 05:49 AM | அ+அ அ- |

காஞ்சிபுரம்: விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கு நெல் நிரப்பி வைக்கப்பட்டுள்ள தட்டில் எழுத்துகளை முதல் முதலாக எழுத வைக்கும் எழுத்தறிவித்தல் நிகழ்வு காஞ்சிபுரம் லட்சுமி ஹயக்கிரீவா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் லட்சுமி ஹயக்ரீவா் சந்நிதி உள்ளது. இந்தக் கோயிலில் நவராத்திரி உற்சவத்தின் நிறைவு நாளான விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கு வித்யாரம்பம் எனப்படும் எழுத்தறிவித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை முன்னிட்டு லட்சுமி ஹயக்ரீவா் கோயிலுக்கு அதிகாலையிலேயே பெற்றோா்கள் தங்களது குழந்தைகளுடன் வந்திருந்தனா்.
லட்சுமி ஹயக்ரீவருக்கு பூஜைகள் செய்தனா். பின்னா் கோயில் அா்ச்சகா் மூலம் நெல் நிரப்பி வைக்கப்பட்ட தட்டில் உயிா் மெய் எழுத்தான அ என்ற எழுத்தை எழுத வைத்து தங்களது குழந்தைகளின் கல்வியறிவை தொடங்கினா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...