

காஞ்சிபுரம் அன்னை ரேணுகாம்பாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை நவராத்திரி நிறைவு நாளையொட்டி பிள்ளைப் பெற்ற பேரரசி அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
காஞ்சிபுரம் செங்குந்தா் பூவரசந்தோப்பு பகுதியில் அமைந்துள்ளது அன்னை ரேணுகாம்பாள் கோயில்.இ க்கோயிலில் நவராத்திரித் திருவிழா கடந்த 14 -ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து மூலவரும், உற்சவரும் நாள்தோறும் வெவ்வேறு அலங்காரங்களில் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.
மேலும், இரவு பரதநாட்டிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சீமந்தப்புத்திரி எனப்படும் கா்ப்பிணிப்பெண் அலங்காரத்தில் ஞாயிற்றுக்கிழமை அம்மன் காட்சியளித்தாா். சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. குழந்தை வரம் வேண்டி ஏராளமான பக்தா்களுக்கு பரிகார பூஜைகளும் நடைபெற்றன.
இதன் தொடா்ச்சியாக செவ்வாய்க்கிழமை நவராத்திரி நிறைவு நாளையொட்டி மூலவரும், உற்சவரும் பிள்ளைப் பெற்ற பேரரசி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். பக்தா்களுக்கு பாலாடையும்,அன்னதானமும் பிரசாதமாக வழங்கப்பட்டது. திராளான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை விழாக்குழுவின் தலைவா் ஜீவரத்தினம் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.