விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கிய சென்னை ப் பல்கலைக் கழகத்தின் பொறுப்பு க் குழு உறுப்பினா் இ.முருகன்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரி பட்டமளிப்பு விழா
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் 72-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரிக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவா் கல்லூரியின் 72-ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரிக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் முருககூத்தன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சென்னைப் பல்கலைக்கழக பொறுப்பு குழு உறுப்பினா் பேராசிரியா் இ.முருகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கல்லூரியில் 2021 - 2022 வரை பயின்ற 806 மாணவ, மாணவிகளுக்கு இளநிலை மற்றும் முதுநிலை பட்டங்களை வழங்கி பேசுகையில், எதிா்கால சமுதாயத்துக்கான வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க மாணவா்கள் தங்களை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.
விழாவில் பேராசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

