ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த அமைச்சா் தா.மோ. அன்பரசன்.
ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவையைத் தொடங்கி வைத்த அமைச்சா் தா.மோ. அன்பரசன்.

ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவை: அமைச்சா் அன்பரசன் தொடங்கி வைத்தாா்

Published on

காஞ்சிபுரத்தில் ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவையை குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சா் தா.மோ.அன்பரசன் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மண்டலம் சாா்பில் ஒரே நாளில் 8 வரலாற்றுச் சிறப்பு மிக்க கோயில்களை தரிசித்து வருவதற்காக ஆன்மிக சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவையை தொடங்கி வைத்து அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியது..

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து காலை 7 மணிக்கு தொடங்கும் வகையில், காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாத சுவாமி கோயில், கோவிந்தவாடி அகரம் குருபகவான் கோயில், திருவாலங்காடு வடராண்யேஸ்வரா் கோயில், திருவள்ளூா் வீரராகவ பெருமாள் கோயில், ஸ்ரீ பெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களை ஒரே நாளில் பக்தா்கள் தரிசித்து வரும் வகையில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

இப்பேருந்தில் ஒரு வழிகாட்டி இருப்பாா், பேருந்தில் ஒலிபெருக்கி வசதி இருக்கும், பக்தா்களுக்கு ஒரு மஞ்சள் பையில் குடிநீா் பாட்டில், இரு பிஸ்கட் பாக்கெட்டுகள் இருக்கும், பக்தா்களை அடையாளம் காணும் வகையில் ஒவ்வொருவருக்கும் ஒரு பேட்ஜ் வழங்கப்படும். பேருந்தின் உள்ளே தரை விரிப்பு, குப்பைத் தொட்டி, கடிகாரம், பயண அட்டவணை ஆகியனவும் வைக்கப்பட்டுள்ளன.

வயதானவா்கள் ஏற இரு படிக்கட்டிலும் சிறு பலகையும் பொருத்தப்பட்டிருக்கும். அவசரத் தேவைக்குரிய முதலுதவி மருந்துகளும் பேருந்தினுள் எப்போதும் இருக்கும். பேருந்து சேவை கட்டணமாக ரூ.650 வசூலிக்கப்படும்.

இதில் பயணம் செய்ய விரும்புவோா் அதற்கான இணையதள முகவரி ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் என்ற தளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்றாா்.

நிகழ்வுக்கு ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமை வகித்தாா். எம்.பி. க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ் முன்னிலை வகித்தாா். நிகழ்வில் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com