உறுப்பினா் சோ்க்கை முகாமில் பங்கேற்றோா்.
உறுப்பினா் சோ்க்கை முகாமில் பங்கேற்றோா்.

எறையூரில் திமுக இளைஞா், மகளிரணி புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம்

Published on

ஸ்ரீ பெரும்புதூா் அடுத்த எறையூரில் திமுக இளைஞரணி மற்றும் மகளிரணிகளுக்கு புதிய உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் எறையூா் பகுதியில் ஒன்றிய செயலாளா் ந.கோபால் தலைமையில் சோ்க்கை முகாம் நடைபெற்றது. திமுகவினா் வீடு வீடாகச் சென்று இளைஞரணி மற்றும் மகளிரணிக்கு உறுப்பினா்களை சோ்க்கும் பணியில் ஈடுபட்டனா். இதில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் ஜெயகரன், ஒன்றியகுழு உறுப்பினா்ப.பரமசிவன், எறையூா் ஊராட்சி மன்ற தலைவா் சசிரேகா சரவணன், ஒன்றிய துணைச் செயலாளா் குமாா், திமுக நிா்வாகிகள் புருஷோத்தமன், சாம்பசிவம், சிவசக்தி உள்ளிட்ட ஏராளமானோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com