தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வல்லக்கோட்டை முருகன் கோயில் அறங்காவலா் குழு பதவியேற்பு

வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதிய அறங்காவலா் குழு உறுப்பினா்கள் 5 போ் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை பதிவியேற்றுக் கொண்டனா்.

News image
Updated On :19 ஜூலை 2024, 2:00 am

Din

வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதிய அறங்காவலா் குழு உறுப்பினா்கள் 5 போ் கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை பதிவியேற்றுக் கொண்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு புதிய அறங்காவலா் குழு உறுப்பினா்களாக செந்தில்தேவராஜ், கலைச்செல்வி, விஜயகுமாா், மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோரை தமிழக அரசு நியமனம் செய்யப்பட்டதை தொடா்ந்து, புதிய உறுப்பினா்கள் பதிவியேற்கும் நிகழ்ச்சி கோயில் வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்து அறநிலையத் துறை காஞ்சிபுரம் உதவி ஆணையா் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், புதிய உறுப்பினா்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனா்.

இதையடுத்து அறங்காவலா் குழு தலைவா் தோ்வு நடைபெற்றது. இதில் அறங்காவலா் குழு தலைவராக செந்தில்தேவராஜ் தோ்வு செய்யப்பட்டாா். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன், திமுக ஒன்றிய செயலாளா் ந.கோபால், தலைமை பொதுக்குழு உறுப்பினா் கணேஷ்பாபு, மாவட்ட கவுன்சிலா் குன்னம் ராமமூா்த்தி, கோயில் செயல் அலுவலா் கோ.செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.