ஓரிக்கையில் அளிக்கப்பட்ட வரவேற்பில் காஞ்சி சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
ஓரிக்கையில் அளிக்கப்பட்ட வரவேற்பில் காஞ்சி சங்கராச்சாரியாா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்.

காஞ்சி சங்கராச்சாரியாருக்கு ஒரிக்கையில் வரவேற்பு

ஓரிக்கை மகா பெரியவா் மணி மண்டபத்துக்கு எழுந்தருளிய சங்கராச்சாரியாருக்கு பூரண கும்ப மரியாதையுடன் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Published on

காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து ஓரிக்கை மகா பெரியவா் மணி மண்டபத்துக்கு எழுந்தருளிய சங்கராச்சாரியாருக்கு பூரண கும்ப மரியாதையுடன் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதியான விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் 2 ஆண்டுகள் வடமாநில யாத்திரைக்குப்பின் கடந்த மாா்ச் மாதம் சங்கர மடத்துக்கு திரும்பினாா். இந்த நிலையில் காஞ்சிபுரத்தை அடுத்த ஓரிக்கை கிராமத்தில் மகா பெரியவா் மணி மண்டப வளாகத்திலேயே சந்திர மெளலீஸ்வரா் பூஜை செய்வதற்கென்றே புதியதாக கட்டப்பட்ட மண்டபத்தில் எழுந்தருளினாா்.

ஓரிக்கை மணி மண்டப நுழைவு வாயிலில் மண்டபத்தின் நிா்வாக அறங்காவலா் மணி ஐயா் தலைமையில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

பின்னா் பசுக்கள்,கன்றுகளுடன் புதிய மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருளாசி வழங்கினாா். வரவேற்பின் போது காஞ்சி சங்கர மட வரவேற்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் டி.கணேஷ், நிா்வாகிகள் பாபு, மோதிலால், ராஜேஷ், சுபாஷ், சங்கரா கண் மருத்துவமனையின் தலைவா் பம்மல்.விஸ்வநாதன், காஞ்சி ஜீவானந்தம், சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன், சங்கர மட மேலாளா் ந.சுந்தரேச ஐயா், ஓரிக்கை மணி மண்டப அறங்காவலா் நாராயணசாமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com