குமரகோட்டம் முருகன் கோயில் புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்பு

குமரகோட்டம் முருகன் கோயில் புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்பு

Published on

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதிய செயல் அலுவலராக கேசவன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் (படம்).

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோயில் புதிய செயல் அலுவலராக திருவள்ளூா் மாவட்டம் சோழவரத்தை சோ்ந்த கேசவன் பொறுப்பேற்றுக் கொண்டாா். இவா் அரசுப்பணியாளா் தோ்வாணையம் குரூப்-7 ஏ போட்டித் தோ்வில் வெற்றி பெற்று முதல் முதலாக புதிய செயல் அலுவலராக பொறுப்பேற்றாா்.

கோயில் பூஜகா்கள், பணியாளா்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனா். முன்னதாக கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வந்த கதிரவன் புதிய செயல் அலுவலா் கேசவனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com