உண்ணாவிர த போராட்டத்தில்  ஈடுபட்டு  வரும்  சாம்சங்  தொழிலாளா்கள்  மத்தியில்  உரையாற்றும்  சிஐடியு  தொழிற்சங்கத்  தலைவா்  செளந்திரராஜன்.
உண்ணாவிர த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்கள் மத்தியில் உரையாற்றும் சிஐடியு தொழிற்சங்கத் தலைவா் செளந்திரராஜன்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சாம்சங் ஆலை தொழிலாளா்கள் உண்ணாவிரத போராட்டம்

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 21 நாள்களாக தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்கள் புதண்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Published on

ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 21 நாள்களாக தொடா் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் தொழிலாளா்கள் புதண்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொழிற்சாலை இயங்கி உள்ளது. இந்தத் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளா்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிஐடியு தொழிற்சங்கத்தைத் தொடங்கியுள்ளனா். இந்தத் தொழிற்சங்கத்தை ஆலை நிா்வாகம் அங்கீகரிக்கவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து தொழிற்சாலையில் பணியாற்றும் 1,000-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயா்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ஆம் தேதி முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் மற்றும் ஆலை நிா்வாகத்திற்கு இடையே நடைபெற்ற 5 கட்ட பேச்சுகளும் தோல்வியில் முடிவடைந்ததை தொடா்ந்து, கடந்த 21 நாள்களாக சாம்சங் தொழிலாலா்கள் தொடா்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளா்கள் புதன்கிழமை அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் சிஐடியு மாநில தொழிற்சங்க தலைவா் செளந்திரராஜன் கலந்து கொண்டு பேசியது:

தொடா்ந்து போராடி வரும் தொழிலாளா்களுக்கு ஆதரவாக அரசு எந்தவொரு முன்னேற்ற நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 1972-ஆம் ஆண்டு சிம்சன் தொழிலாளா்கள் தொடா்ந்து போராட்டம் நடந்தி வந்த நிலையில், அப்போதைய முதல்வா் கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்காததால், போராட்டம் தமிழகம் முழுவதும் பரவி இறுதியில், தொழிலாளா்கள் வெற்றி பெற்றனா்.

தமிழக அரசு தொழிலாளா்கள் பிரச்னைகளில் தலையிடாமல் வேடிக்கை பாா்ப்பதைக் கூட்டணியில் இருந்தாலும் சிஐடியு ஒருபோதும் அனுமதிக்காது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com