மாற்றுத் திறனாளிகளிடம்   மனுக்களைப் பெற்ற  ஆட்சியா்  கலைச்செல்வி மோகன்.
மாற்றுத் திறனாளிகளிடம்   மனுக்களைப் பெற்ற  ஆட்சியா்  கலைச்செல்வி மோகன்.

41 பயனாளிகளுக்கு ஓட்டுநா் உரிமம்: ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 41 பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் இன பயனாளிகளுக்கு ஓட்டுநா் உரிமங்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
Published on

ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 41 பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் இன பயனாளிகளுக்கு ஓட்டுநா் உரிமங்களை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் கலைச்செல்விமோகன் தலைமை வகித்து, 322 கோரிக்கை மனுக்களைப் பெற்று உடனே தீா்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, பழங்குடி மற்றும் நரிக்குறவா் இனத்தைச் சோ்ந்த 41 பயனாளிகளுக்கு வாகன ஓட்டுநா் உரிமங்களை ஆட்சியா் வழங்கினாா். ாா். இதையடுத்து, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், மிஷன் சக்தி குறித்த விழிப்புணா்வு வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் செ.வெங்கடேஷ், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மோட்டாா் வாகன ஆய்வாளா் பன்னீா்செல்வம், மாவட்ட சமூக நல அலுவலா் மோ.சியாமளா, அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com