ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

காஞ்சிபுரம் ராஜாஜி மாா்க்கெட்டில் இடையூறாக காய்கறிக் கடைகள்

ராஜாஜி காய்கறி மாா்க்கெட்டில் கடைகளுக்கு உள்ளே காய்கறிகளை வைத்து விற்பனை செய்யாமல், பெரும்பாலான கடைகள் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள்

News image

பொதுமக்களுக்கு இடையூறாக கடைகளுக்கு முன் அமைக்கப்பட்டுள்ள காய்கறிக் கடைகள்.

Updated On :29 ஏப்ரல் 2025, 1:11 am IST

சி.வ.சு.ஜெகஜோதி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் அண்மையில் திறக்கப்பட்ட ராஜாஜி காய்கறி மாா்க்கெட்டில் கடைகளுக்கு உள்ளே காய்கறிகளை வைத்து விற்பனை செய்யாமல், பெரும்பாலான கடைகள் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக கடைகள் நடத்தப்படுகின்றன.

காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலைய சாலையில் அமைந்துள்ளது ராஜாஜி காய்கறி சந்தை. சுமாா் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வந்த இந்த காய்கறிச் சந்தை மழைக்காலங்களில் தண்ணீா் தேங்கியும், காய்கறிக் கடைகளின் மேற்கூரைகள் சிதைந்தும், பாழடைந்த கட்டடமாக இருந்ததால் இங்கு வந்து காய்கறி வாங்கிச் செல்ல பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனா்.

இதையடுத்து சந்தையைச் சீரமைத்து புதிதாக கட்ட முடிவு செய்து இதற்கென அரசு கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.7 கோடி ஒதுக்கியது. காய்கறி சந்தை புதுப்பிக்கப்பட்டு கடந்த 14.2.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.

திறந்து வைக்கப்பட்ட கடைகளில் 189 கடைகள் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளால் மேற்கூரை போடப்பட்டும், 60 காங்கிரீட் கடைகளாகவும் மொத்தம் 249 கடைகள் திறந்து வைக்கப்பட்டன.

இதே சந்தை வளாகத்தில் சேமிப்புக் கிடங்கு, கழிப்பறை வசதிகள், கண்காணிப்பு அறை, வாகனங்கள் நிறுத்தும் இடம் ஆகியவையும் திறந்து வைக்கப்பட்டது. ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளால் மேற்கூரை அமைக்கப்பட்ட 189 கடைகள் இரும்புக் கம்பிகளால் அமைத்து தனித்தனியாக பிரிக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கடைகளுக்குள் வைத்து காய்கறிகளை விற்பனை செய்யாமல் அந்தந்த கடைகளுக்கு முன்பாக பொதுமக்கள் செல்லும் வழியில் காய்கறிகளை விரித்து வைத்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனா். இதனால் பொதுமக்கள் ஒவ்வொரு கடைக்கும் சென்று காய்கறிகளை வாங்க அவதிப்பட்டு வருகின்றனா். சிலா் தடுமாறி காய்கறிகளின் மீதே விழுந்தும் விடுகின்றனா்.

இது குறித்து காய்கறி வியாபாரிகள் கூறுகையில், அரசு அமைத்துக் கொடுத்த காய்கறிக் கடைகளின் மேற்கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டுகளால் வேயப்பட்டிருப்பதால், கடைக்குள் இருக்க முடியவில்லை. வெயில் காலமாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல்தான் காய்கறிகளை கடைகளுக்கு வெளியில் பொதுமக்கள் செல்லும் பாதையில் வைத்து விற்பனை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றனா்.

Story image