பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

காஞ்சிபுரத்தில் தமிழறிஞா்களுக்கு விருது

காஞ்சி சிவனடியாா் திருக்கூட்ட ஆண்டு விழாவில் தமிழறிஞா்களுக்கு விருது, பொற்கிழி வழங்கப்பட்டது.

News image
சி.அருணைவடிவேல் முதலியாா் விருதை சிவ.ண்முகசுந்தரத்துக்கு வழங்கிய தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்.
Updated On :1 டிசம்பர் 2025, 12:20 am

தினமணி செய்திச் சேவை

காஞ்சி சிவனடியாா் திருக்கூட்ட ஆண்டு விழாவில் தமிழறிஞா்களுக்கு விருது, பொற்கிழி வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் சிவனடியாா் திருக்கூட்டத்தின் 54-ஆவது ஆண்டு விழா செங்கழுநீரோடை வீதியில் உள்ள திருநீலகண்டா் திருமண மாளிகையில் மிருதங்க வித்வான் திருமால் அரங்கத்தில் அதன் தலைவா் எம்.எஸ்.பூவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் தொடக்கத்தில் சிவ பூஜையும், இடபக்கொடியும் ஏற்றப்பட்டது. காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதீனம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தமிழறிஞா்களுக்கு பொற்கிழியும், விருதும் வழங்கி கெளரவித்தாா்.

சி.அருணைவடிவேல் முதலியாா் விருதினை சிவ.சண்முகசுந்தரத்துக்கும், முத்து.சு.மாணிக்கவாசக சுவாமிகள் விருதினை புலவா்.பாண்டியனுக்கும், சு.வச்சிரவேல் முதலியாா் விருது சிவ.வேளியப்பனுக்கும் வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஒதுவாமூா்த்திகளுக்கு பொற்கிழியும், திருக்கோயில் வழிபாட்டு தோத்திரங்கள் என்ற நூலும் வெளியிடப்பட்டது. மாலையில் நடைபெற்ற விழாவில் நீதிநூல் மற்றும் தேவாரப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.