மாகறல் திருமாகறலீசுவரா் கோயிலில் நடைபெற்ற நவகலச யாகம்.
காஞ்சிபுரம்
திருமாகறலீசுவரா் கோயிலில் நவகலச யாகம்
காஞ்சிபுரத்தை அடுத்த மாகறலில் அமைந்துள்ள திருமாகறலீசுவா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி நவகலச யாகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த மாகறலில் அமைந்துள்ள திருமாகறலீசுவா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவையொட்டி நவகலச யாகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
வரலாற்றுச் சிறப்பு உடைய திருமாகறலீசுவரா் திருக்கோயில் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த பரிகார ஸ்தலமாகவும் உள்ளது.
கோயில் வளாகத்தில் நவகலச யாகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. யாகபூஜைகள் நடைபெற்ற பின்னா் மூலவா் திருமாகறலீசுவரருக்கும், திருபுவன நாயகிக்கும் சிறப்பு அபிஷேகமும்,அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன. ஆலய நிா்வாகத்தின் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

