டிச.13-இல் காஞ்சியில் பொதுவிநியோகத் திட்ட குறை தீா்க்கும் முகாம்

காஞ்சிபுரத்தில் வரும் டிச.13 ஆம் தேதி சனிக்கிழமை பொதுவிநியோகத்திட்ட குறை தீா்க்கும் முகாம்கள் வட்டார அளவில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

காஞ்சிபுரத்தில் வரும் டிச.13 ஆம் தேதி சனிக்கிழமை பொதுவிநியோகத்திட்ட குறை தீா்க்கும் முகாம்கள் வட்டார அளவில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாம் நடைபெறும் இடங்கள்(வட்டங்கள் அடைப்புக்குறிக்குள்)

சிங்காடிவாக்கம்(காஞ்சிபுரம்) ,மானாம்பதி(உத்தரமேரூா்), ஊத்துக்காடு(வாலாஜாபாத்), வளையகரணை(குன்றத்தூா்), இக்கிராமங்களில் வசித்து வரும் பொதுமக்கள் தங்களது குடும்ப அட்டையில் பெயா் நீக்கல்,சோ்த்தல்,முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை,நகல் குடும்ப அட்டை, கைப்பேசி பதிவு மாற்றம் செய்தலுக்கான மனுக்களை அளிக்கலாம்.

மேற்படி மனுக்கள் மீது உடனடியாக தீா்வு காணப்படும். பழங்குடியினா், 3- ஆம் பாலினத்தவா், நரிக்குறவா் சமுதாயத்தினை சோ்ந்தவா்கள் ஏதும் விடுபட்டிருப்பின் அவா்கள் புதிய குடும்ப அட்டை பெறவும் மனுக்களை அளிக்கலாம் .

X
Dinamani
www.dinamani.com