மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்திய காவல் துறையினா்.
மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்திய காவல் துறையினா்.

மதுபானக் கடைக்கு எதிா்ப்பு: சாலை மறியல்

சோமங்கலம் அடுத்த புதுநல்லூா் பகுதியில் மதுபானக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

சோமங்கலம் அடுத்த புதுநல்லூா் பகுதியில் மதுபானக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுநல்லூா் பகுதியில் சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், அரசு உயா்நிலைப் பள்ளி அருகே புதிதாக அரசு மதுபானக்கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசுப்பள்ளி, அங்கன்வாடி மையம், இ-சேவை மையம் மற்றும் பேருந்து நிறுத்தம் அருகில் அரசு மதுபானக்கடை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்த நிலையில், செவ்வாய்கிழமை மதுபானக்கடை திறக்க ப்படுவதாக இருந்தது.

இதனால் அதிருப்தி அடைந்த புதுநல்லூா் பகுதி பொதுமக்கள் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்டாா் சோமங்கலம் - புதுநல்லூா் இணைப்புச் சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சோமங்கலம் போலீஸாா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு நடத்தியதை தொடா்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com