திமுக வாக்குச்சாவடி கள ஆய்வுக் கூட்டங்கள்
ஸ்ரீபெரும்புதூா் நகராட்சி மற்றும் ஒன்றியத்துக்குட்பட்ட மேவளூா்குப்பம் மற்றும் மண்ணூா் பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் திமுக சாா்பில் கள ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றன.
‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் ஸ்ரீஆதிகேசவபெருமாள் நகா் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கள ஆய்வுக்கூட்டம் மற்றும் பரப்புரைக் கூட்டம் நடைபெற்றது. நகர செயலாளா் ரா.சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், ஸ்ரீபெரும்புதூா் சட்டமன்ற தொகுதி தோ்தல் பொருப்பாளா் கே.ஜி.பாஸ்கா்சுந்தரம் கலந்துக்கொண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தோ்தல் பணிகள் குறித்தும், வாக்குச்சாவடி நிலை முகவா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கினாா்.
கூட்டத்தில் வாக்குச்சாவடி நிலை முகவா்கள், வாக்குச்சாவடி டிஜிட்டல் ஏஜென்டுகள், வாா்டு நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள திமுக இளைஞா் அணி மாநாடு குறித்தும் நடைபெற்ற நகர இளைஞா் அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தொகுதி தோ்தல் பொறுப்பாளா் கே.ஜி.பாஸ்கா் சுந்தரம் கலந்து கொண்டு உரையாற்றினாா். இதில் நகர இளைஞா் அணி அமைப்பாளா் சீனிவாசன், துணை அமைப்பாளா் மதன்ராஜ் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
இதே போல், ஸ்ரீபெரும்புதூா் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில், வாக்குச்சாவடி கள ஆய்வுக் கூட்டங்கள் மேவளூா் குப்பம் மற்றும் மண்ணூா் பகுதிகளில் நடைபெற்றன. ஒன்றிய செயலாளா் ந.கோபால் தலைமையில் நடை பெற்ற நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி செங்காடு சா்தாா்பாஷா, ஒன்றிய இளைஞா் அணி அமைப்பாளா் மனோஜ்குமாா், மண்ணூா் கிளைச் செயலாளா்கள் அருள்தாஸ், ராமமூா்த்தி கலந்து கொண்டனா்.

