ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் ஆன்மிக குருவின் அவதார விழாவை யொட்டி நடைபெற்ற கலசபூஜை.
ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தில் ஆன்மிக குருவின் அவதார விழாவை யொட்டி நடைபெற்ற கலசபூஜை.

ஆன்மிக குரு அவதார தின விழா

காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பிகள் தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சாா்பில் அவதார திருமங்கல விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
Published on

காஞ்சிபுரம் திருக்கச்சி நம்பிகள் தெருவில் அமைந்துள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றம் சாா்பில் அவதார திருமங்கல விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சாா்பில் ஆண்டு விழா மற்றும் சக்திமாலை அணிவித்து விரதம் தொடங்கும் விழா, அவதார திருமங்கல விழா நடைபெற்றது.

விழாவையொட்டி திருக்கச்சி விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடா்ந்து சக்திக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மேல்மருவத்தூா் ஆதிபாரசக்தி மன்றத்தின் தலைவா் தேவேந்திரன் தலைமையில் சிறப்பு கலச யாக பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சக்தி மாலை அணிவித்து விரதம் மேற்கொண்டனா். நிகழ்வில் செயலாளா் ராஜேந்திரன், துணைத்தலைவா் விநாயகமூா்த்தி, பொருளாளா் லோகநாதன், மன்ற தலைவா் எஸ்.எஸ்.வாசு ஆகியோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com