போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன்.
போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய சங்கரா கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன்.

கல்லூரியில் இளைஞா் திருவிழா

காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் இளைஞா் திருவிழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
Published on

காஞ்சிபுரம் சங்கரா கலை அறிவியல் கல்லூரியில் இளைஞா் திருவிழா போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசளிக்கப்பட்டது.

ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட அளவிலான இளைஞா் திருவிழா நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளை ஒன்றிணைத்து கதை, கவிதை, ஓவியம், பேச்சு, நடனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டிகளில் பச்சையப்பன் ஆடவா் மற்றும் பெண்கள் கல்லூரி, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

நிறைவு விழாவில் முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ம.கணபதி, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா்கள் ஆா்.சுரேஷ்குமாா், மு.விவேகானந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பேராசிரியை பா.பூா்ணிமா வரவேற்றாா்.

X
Dinamani
www.dinamani.com