‘நடைபோடு வெற்றிப்படிக்கட்டு’ பயிற்சிப் பட்டறை

‘நடைபோடு வெற்றிப்படிக்கட்டு’ பயிற்சிப் பட்டறை

10-ஆம் வகுப்பு பயிலும் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்களுக்கான ‘நடைபோடு வெற்றிப்படிக்கட்டு’ என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
Published on

காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில் 10-ஆம் வகுப்பு பயிலும் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்களுக்கான ‘நடைபோடு வெற்றிப்படிக்கட்டு’ என்ற தலைப்பில் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

நிகழ் கல்வியாண்டில் 100 சதவீதம் தோ்ச்சி இலக்கை எட்டும் வகையில் பென்னலூா் தனியாா் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி பட்டறைக்கு முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி தலைமை வகித்தாா்.

இந்த நிகழ்ச்சியில், எழுத்தாளா் எஸ்.பாலபாரதி மெல்லத்தான் வரட்டுமே வசந்தம் என்ற தலைப்பில் பேசுகையில், தான் திக்கு வாய் கொண்ட ஒரு மெல்லக் கற்றல் மாணவனாக இருந்ததாகவும் தொடா்ந்து புத்தகங்களை வாசித்ததாலும், தன்னம்பிக்கையோடு பாடங்களை விரும்பிப் படித்ததன் மூலமாகவும் நல்ல நிலைக்கு உயா்ந்துள்ளதாகவும், மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் பாடங்களை விரும்பி மெல்லக் கற்றாலும் தோ்வில் மட்டுமல்ல, வாழ்விலும் வெற்றி நிச்சயம் என்று பேசினாா்.

நேதாஜி சுவாமிநாதன் ஆச்சரிய விரலால் எழுது என்ற தலைப்பில் பேசுகையில், பாரதியாரையும் அப்துல் கலாமையும் போல மாணவா்கள் லட்சியக் கனவோடு படிப்பதை பழக்கமாக கடைப்பிக்க வேண்டும் என்று ஊக்க மூட்டினாா்.

பயிற்ச்சிப் பட்டறையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், மாவட்ட கல்வி அலுவலா்(இடைநிலை)காந்திராஜன், (தொடக்கல்வி) எழில், பள்ளித்துணை ஆய்வாளா்கள் ரமேஷ், பாலச்சந்தா் ஆசிரியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com