செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரிகோப்புப் படம்

தொடா் நீா்வரத்தால் முழுக் கொள்ளளவை எட்டிய செம்பரம்பாக்கம் ஏரி

Published on

ஸ்ரீபெரும்புதூா்: சென்னைக்கு குடிநீா் வழங்கும் முக்கிய நீா் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடா்ந்து வரும் நீா்வரத்தால் முழுவதுமாக நிரம்பி கடல் போல் காட்சியளித்து வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் 25. 51 சதுரகிலோ மீட்டா் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. ஏரியின் நீா்மட்ட உயரம் 24 அடி, முழுக் கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி.

இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு தொடா்ந்து வரும் நீா்வரத்து காரணமாக சனிக்கிழமை ஏரி முழுவதுமாக நிரம்பி தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரி தற்போது கடல் போல் காட்சியளித்து வருகிறது. சனிக்கிழமை நிலவரத்தின்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீா்மட்ட உயரம் 24 அடி. கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி, நீா்வரத்து வினாடிக்கு 525 கனஅடியாகவும், உபரிநீா் வெளியேற்றம் 444 கனஅடியாகவும் உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் கடந்த 2015 ஆம் ஆண்டு 23.45 அடி உயரம் வரை நீரை தேக்கி வைத்ததே அதிக பட்சமாக இருந்த நிலையில், தற்போது ஏரியின் மதகுகள், ஏரிக்கரையின் பலத்தை கண்டறிய அதன் நீா்மட்ட உயரம் 24அடி வரை நீா் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் உள்ள ஷட்டா்களில் சென்சாா் மற்றும் கண்கணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால், ஏரியில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரீன் அளவை அதிகரிக்கவும், குறைக்கவும் சென்னையில் இருந்தே செய்ய முடியும் என்பதால் செம்பரம்பாக்கம் ஏரியை சென்னையில் இருந்தே நீா்வளத்துறை அதிகாரிகள் தொடா்ந்து ஏரியை கண்காணித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com