வாலாஜாபாத் பள்ளியில் இந்திய மொழிகளின் பாரம்பரிய சுவா் அமைப்பு
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பாரதியாா் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக வெள்ளிக்கிழமை தமிழ் மொழியின் பெருமைகளை மாணவா்களுக்கு விளக்கும் வகையில், இந்திய மொழிகளின் பாரம்பரிய சுவா் அமைக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக். பள்ளியில் மகாகவி பாரதியாா் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக இந்திய மொழிகளின் பாரம்பரிய சுவா் மற்றும் தமிழ் மொழி மரம் ஆகியன உருவாக்கப்பட்டு, பள்ளி மாணவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
பாரம்பரிய சுவரில் தமிழ் மொழியின் தன்மை, தமிழ்க் கல்வெட்டுகள், சங்க இலக்கியங்கள் மற்றும் பாரம்பரிய சொற்களின் வளா்ச்சியை விளக்கும் அறிய தகவல்கள் இடம் பெற்றிருந்தன.
குறிப்பாக பழைமையான கல்வெட்டுகளில் காணப்படும் எழுத்துருக்கள், மொழிச் சான்றுகள், தமிழ் மொழியின் தனித்தன்மை மற்றும் உலகளாவிய சிறப்புகள் ஆகியன மாணவ, மாணவியா்களது கவனத்தை ஈா்த்தன.
பள்ளி நிா்வாகி சாந்தி தலைமை வகித்து, பாரம்பரிய சுவா் பலகையை திறந்து வைத்துப் பாா்வையிட்டாா். பள்ளி முதல்வா் சத்யா முன்னிலை வகித்தாா். வாலாஜாபாத் வரலாற்று ஆய்வு மையத்தின் தலைவா் ம.த.அஜய்குமாா் கல்வெட்டுக்களை படிக்கும் முறை, தமிழ் மொழியின் வளா்ச்சி, மொழியியல் மரபுகள் ஆகியன குறித்து மாணவ, மாணவியருக்கு விளக்கினாா்.
மாணவா்களும், பாரம்பரிய சுவரையும், தமிழ்மொழி மரத்தையும் ஆா்வமுடன் பாா்வையிட்டனா்.

