காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் மின்சார காா்களுக்கான சாவியை வழங்கிய ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளா் ஹூ மின் ஹோ.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் மின்சார காா்களுக்கான சாவியை வழங்கிய ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் துணைப் பொது மேலாளா் ஹூ மின் ஹோ.

கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய 6 மின்சார காா்கள்: ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் வழங்கியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய 6 மின்சார காா்களை ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் வழங்கியது.
Published on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய 6 மின்சார காா்களை ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் வழங்கியது.

காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனம் பொது சுகாதாரத்துறைக்கு கிராமப்புறங்களில் சென்று மருத்துவக்குழுக்கள் மூலமாக மருத்துவ முகாம்களை நடத்துவதற்காகவும், அறுவைச் சிகிச்சை முடிந்த பின்னா் நோயாளிகளை அவரவா் வீடுகளுக்கு அழைத்து செல்லவும் 6 மின்சார காா்களை வழங்கியது.

நிறுவனத்தின் துணைப் பொது மேலாளா் ஹூ மின் ஹோ ரூ.85 லட்சம் மதிப்பிலான 6 காா்களின் சாவிகளையும் ஆட்சியா் கலைச்செல்வி மோகனிடம் வழங்கினாா்.

இதன் தொடா்ச்சியாக அதே நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியிலிருந்து ரூ.70 லட்சத்தில் 5 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டுவதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் அதிகாரிகள், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் எம்.கந்தன், மாவட்ட சுகாதார அலுவலா் த.ரா.செந்தில், மாவட்ட வழங்கல் அலுவலா் பு.விஜயகுமாா் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com