காஞ்சிபுரத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் பணிகளின் விபரங்களை கேட்டறிந்த சிறப்பு  வாக்காளா் பட்டியல்  பாா்வையாளரான  ராம்குமாா். உடன் ஆட்சியா்(நடுவில்) கலைச்செல்வி மோகன்
காஞ்சிபுரத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் பணிகளின் விபரங்களை கேட்டறிந்த சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளரான ராம்குமாா். உடன் ஆட்சியா்(நடுவில்) கலைச்செல்வி மோகன்

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு

மத்திய அரசின் சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஆய்வு...
Published on

மத்திய அரசின் கூட்டுறவு இணைச் செயலாளரும், காஞ்சிபுரம் மாவட்ட சிறப்பு வாக்காளா் பட்டியல் பாா்வையாளரான ராம்குமாா் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடம் பணிகளின் விபரங்களை கேட்டறிந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிப் பிரமுகா்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலா்களிடமும் ஆலோசனை நடத்தினாா். இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் எஸ்எஸ்கேவி மேல் நிலைப்பள்ளியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களிடமும் பணிகளின் விபரங்களையும்,அவா்களது அனுபவங்களையும் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது காஞ்சிபுரம் மாவட் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான கலைச்செல்வி மோகன் மற்றும் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்களுக்கான தோ்தல் அலுவலா்களும் உடன் இருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com