பயனாளிக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
பயனாளிக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கிய ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

60 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை: காஞ்சிபுரம் ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் 60 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.
Published on

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 60 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீா் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச.ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் பு.விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 405 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்று அவை துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அனுப்பி உடனடியாக தீா்வு காணுமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிக்கும் 60 பேருக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். கூட்டத்தில் அரசு அலுவலா்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com