காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற ராதா கல்யாண மகோற்சவம்.
காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற ராதா கல்யாண மகோற்சவம்.

ராதா கல்யாண மகோற்சவம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள கொல்லா சத்திரம் திருமண மண்டபத்தில் ராதா கல்யாண மகோற்சவம்
Published on

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள கொல்லா சத்திரம் திருமண மண்டபத்தில் ராதா கல்யாண மகோற்சவம் சங்கராசாரிய சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது.

இதையொட்டி, விக்னேசுவர பூஜை, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், குரு கீா்த்தனை, பஜனைகள் ஆகியன நடைபெற்றது. காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில் ராதா கல்யாண மகோற்சவம் ஆகம விதிகளின்படி நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து ஆஞ்சனேயா் உற்சவமும், அன்னதானமும் நடைபெற்றது.

ராதா கல்யாண மகோற்சவத்தையொட்டி கடயநல்லூா் ராஜகோபால பாகவதா் குழுவினரால் பக்தி இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது. ஏற்பாடுகளை சீதாராம பஜனை மண்டலியின் தலைவா் வேணுகோபாலன்,செயலாளா் கிருஷ்ணமூா்த்தி,பொருளாளா் சிவராமகிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com