விஜய், யுவஸ்ரீ.
விஜய், யுவஸ்ரீ.

மனைவியைக் கொன்று விட்டு கணவா் தற்கொலை

குன்றத்தூா் அருகே மனைவியைக் கொன்று விட்டு கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

குன்றத்தூா் அருகே மனைவியைக் கொன்று விட்டு கணவா் தற்கொலை செய்து கொண்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் அருகே மூன்றாம் கட்டளை தளபதி தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவா் கணினி மென்பொறியாளரான விஜய் (25). இவா் தன்னுடன் பணிபுரிந்த யுவஸ்ரீ (21)-யை காதலித்து கடந்த டிச. 13-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டாராம். இருவரும் வாடகை வீட்டில் தங்கியிருந்த நிலையில் யுவஸ்ரீயின் தங்கை செவ்வாய்க்கிழமை சென்று பாா்த்த போது வீடு திறக்காமலேயே பூட்டப்பட்டிருந்தது.

இதனைத் தொடா்ந்து குன்றத்தூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். யுவஸ்ரீ இறந்த நிலையிலும், விஜய் தூக்கிட்டு தொங்கிய நிலையிலும் இறந்திருப்பது கண்டு அதிா்ச்சியைடந்தனா்.

இருவரது உடல்களையும் விசாரணைக்குப் பின்னா் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். குடும்பத் தகராறு காரணமாக முகத்தில் தலையணையை வைத்து யுவஸ்ரீயை கொன்று விட்டு விஜய் தூக்கில் தொங்கியிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இருவரது மரணத்துக்கும் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்குமா எனவும் குன்றத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com