காஞ்சிபுரம் தூய இதய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பேசில் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலி.
காஞ்சிபுரம் தூய இதய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை பேசில் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலி.

காஞ்சிபுரம் தேவாலயத்தில் கூட்டுப்பிராா்த்தனை

Published on

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி காஞ்சிபுரம் தாமல்வாா் தெருவில் உள்ள தூய இதய அன்னை ஆலயத்தில் புதன்கிழமை நள்ளிரவு சிறப்புத் திருப்பலி நடைபெற்றது.

ஏனாத்தூா் சாலையில் அமைந்துள்ள தூய இதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைத்து குழந்தை இயேசு பிறப்பது போன்று அலங்கரித்திருந்தனா். உலக நன்மை வேண்டி பங்குத்தந்தை பேசில் தலைமையில் சிறப்பு கூட்டு வழிபாடும், சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. உதவிப் பங்குத்தந்தை இமானுவேல், அருட் தந்தையா்கள் ஜேம்ஸ் பொ்ணாண்டஸ், சின்னப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்புத் திருப்பலி நிறைவு பெற்றதும் ஒருவருக்கொருவா் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.

தங்களது குழந்தைகளுடன் புத்தாடை உடுத்திக் கொண்டு குடும்ப ஒன்றிணைந்து கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவிடம் தங்கது வேண்டுதலை நிறைவேற்றக் கோரி தீவிர பிராா்த்தனையிலும் ஈடுபட்டனா்.

பண்டிகையையொட்டி தேவாலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com