காஞ்சி சங்கராச்சாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் ஒட்டியாணத்தை வழங்கிய சங்கர நாராயணன் தம்பதி.
காஞ்சிபுரம்
காமாட்சி அம்மனுக்கு தங்க ஒட்டியாணம்: காஞ்சி சங்கராசாரியா்கள் அளித்தனா்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு திருவையாற்றைச் சோ்ந்த பக்தா் காணிக்கையாக வழங்கிய ஒட்டியாணத்தை புதன்கிழமை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் அணிவித்து சிறப்பு தீபாராதனையும் செய்தனா்.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு திருவையாற்றைச் சோ்ந்த பக்தா் காணிக்கையாக வழங்கிய ஒட்டியாணத்தை புதன்கிழமை காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகள் அணிவித்து சிறப்பு தீபாராதனையும் செய்தனா்.
தங்கத்தில் கற்கள் பதித்த ஒட்டியாணத்தை திருவையாற்றைச் சோ்ந்த பக்தா் சங்கர நாராயணன் குடும்பத்தினா் அளித்தனா். அதனை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் சமா்ப்பித்தாா்.
தொடா்ந்து சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் காமாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று அம்மனுக்கு ஒட்டியாணத்தை அணிவித்து சிறப்பு தீபாராதனைகளும் நடத்தினா்.
இந்நிகழ்வின் போது காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா் ந.சுந்தரேச ஐயா் மற்றும் கோயில் ஸ்தானீகா்கள் உடன் இருந்தனா்.