கச்சபேஸ்வரா் கோயில் வருஷாபிஷேக நிகழ்வையொட்டி பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் கச்சபேஸ்வரா், சுந்தராம்பிகை.
கச்சபேஸ்வரா் கோயில் வருஷாபிஷேக நிகழ்வையொட்டி பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் கச்சபேஸ்வரா், சுந்தராம்பிகை.

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயிலில் வருஷாபிஷேகம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு
Published on

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, வருஷாபிஷேக விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெருமாள் ஆமை (கச்சம்) வடிவில் சிவபெருமானை வணங்கிய பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள பழைமையான கச்சபேஸ்வரா் திருக்கோயில். இந்தக் கோயிலில் கடந்த ஆண்டு தை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிப்ரவரி 1-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. நிகழாண்டு தை மாத சித்திரை நட்சத்திரத்தையொட்டி, முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வருஷாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி, காலையில் சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்பட்டு மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

நிகழ்ச்சியில், கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன், ஆலய திருப்பணிக்குழுவின் தலைவா் எஸ்.பெருமாள், செயலாளா் சுப்பராயன், செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவா் எம்.சிவகுரு உள்பட திருப்பணிக் குழு நிா்வாகிகள், கோயில் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com