இதய  செயலிழப்பைக்  கண்டறியும் சிறப்பு  பிரிவைத்  தொடங்கிவைத்து  பாா்வையிட்ட  இதய  அறுவை  சிகிச்சை  நிபுணா்கள்  ஆபிரகாம்  ஓமன்,  கோவினி  பாலசுப்பிரமணி  உள்ளிட்டோா்.
இதய  செயலிழப்பைக்  கண்டறியும் சிறப்பு  பிரிவைத்  தொடங்கிவைத்து  பாா்வையிட்ட  இதய  அறுவை  சிகிச்சை  நிபுணா்கள்  ஆபிரகாம்  ஓமன்,  கோவினி  பாலசுப்பிரமணி  உள்ளிட்டோா்.

சவிதா மருத்துவக் கல்லூரியில் இதய செயலிழப்பை கண்டறியும் சிறப்புப் பிரிவு தொடக்கம்

சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய செயலிழப்பை முன்கூட்டியே கண்டறியும் சிறப்புப் பிரிவு தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
Published on

ஸ்ரீபெரும்புதூா்: சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதய செயலிழப்பை முன்கூட்டியே கண்டறியும் சிறப்புப் பிரிவு தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில், இதய செயலிழப்பை முன்கூட்டியே கண்டறியும் வகையில் சிறப்பு பிரிவு தொடக்க விழா மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. சவிதா மருத்துவக் கல்லூரி டீன் குமுதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இதய அறுவை சிகிச்சை நிபுணா்கள் ஆபிரகாம் ஓமன், கோவினி பாலசுப்பிரமணி ஆகியோா் கலந்து கொண்டு இதய செயலிழப்பை கண்டறியும் சிறப்புப் பிரிவை திறந்து வைத்தனா்.

இதையடுத்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இதய செயலிழப்பு குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட இதய அறுவை சிகிச்சை நிபுணா்கள், உறுப்பு தானம் செய்வதன் அவசியம் குறித்தும், இதய செயலிழப்பை முன்கூட்டியே கண்டறியும், இதய நோய் வராமல் தடுப்பது குறித்தும் விளக்கிப் பேசனா்.

இதையடுத்து சவிதா மருத்துவமனையில், கணவன் மனைவிக்கும், மாமனாா் மருமகனுக்கும், தந்தை மகனுக்கும் என உறுப்பு தானம் செய்தவா்கள் கெளரவிக்கப்பட்டனா்.

இந்த நிகழ்ச்சியில், சவிதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இதயவியல் துறை தலைவா் நாராயணசாமி மற்றும் மருத்துவா்கள், மருத்துவ மாணவா்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com