கூட்டுறவு மேலாண்மை பயிற்சி வகுப்பில் சேர ஜூலை 20 வரை அவகாசம்

காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர, ஜூலை 20 ஆம் தேதி வரை அவகாசம்
Published on

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் முழுநேர பட்டயப் பயிற்சி வகுப்பில் சேர, ஜூலை 20 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: காஞ்சிபுரம் பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை நிலைய முழு நேர கூட்டுறவு பட்டயப் பயிற்சி வகுப்புக்கு ஜூலை 20-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக் காலம் ஓராண்டாகும்.

இரு பருவ முறைகள் கொண்ட பயிற்சிக்கு, பிளஸ் 2 வகுப்பு தோ்ச்சி அல்லது 10-ஆம் வகுப்புடன் கூடிய பட்டயப் படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது வரம்பில்லை, 17 வயது பூா்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.

இது தொடா்பாக, ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ரீன்.ற்ய்.ஞ்ா்.ண்ய் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமும் ரூ.100 இணையவழியாகவே செலுத்த வேண்டும். தோ்வு செய்யப்பட்ட பயிற்சியாளா்களும் பயிற்சிக்கான கட்டணம் ரூ.20,750 முழுவதையும் ஒரே தவணையில் இணையம் வழியாக செலுத்த வேண்டும். தமிழில் மட்டுமே பயிற்சி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு, பேரறிஞா் அண்ணா கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையம், 51, வந்தவாசி சாலை, ஆட்சியா் அலுவலகம் எதிா்புறம், காஞ்சிபுரம், 631 501 என்ற முகவரியில் நேரிலோ அல்லது 044-2723 7699 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com