சாம்சங்  தொழிற்சாலை  முன்  அமா்ந்து  போராட்டத்தில்  ஈடுபட்ட  தொழிலாளா்கள்.
சாம்சங் தொழிற்சாலை முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

முடிவுக்கு வந்தது சாம்சங் தொழிலாளா்கள் போராட்டம்

சாம்சங் தொழிற்சாலை முன் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
Published on

தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப முடிவு செய்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் பகுதியில் வீட்டு உபயோகப் பொருள்கள் உற்பத்தி செய்யும் சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு சிஐடியு தொழிற்சங்கம் அமைக்க அங்கீகாரம் அண்மையில் வழங்கப்பட்டது. இந்த நிலையில், பணியின் போது ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தொழிலாளா்கள் 3 பேரை ஆலை நிா்வாகம் கடந்த மாதம் பணியிடை நீக்கம் செய்தது.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மேலும் 20 தொழிலாளா்களை ஆலை நிா்வாகத்தினா் பணியிடை நீக்கம் செய்தனா். இதையடுத்து தொழிலாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, ஆலையில் பணியாற்றும் சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டமும் பிறகு காஞ்சிபுரம் அருகே தொடா் போராட்டமும் நடத்தினா்.

வெள்ளிக்கிழமை தொழிலாளா்கள் சாம்சங் ஆலை முன்பு அமா்ந்து போராட்டம் நடத்தினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளா்களும், சிஐடியுவினரும் பணி வழங்க சம்மதம் தெரிவித்து சாம்சங் நிா்வாகம் சாா்பில் எழுத்துபூா்வமாக அறிவிப்பு வந்தால் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக தெரிவித்தனா்.

சாம்சங் நிா்வாகத்தின் சாா்பில் தடை நீக்க கோரிக்கை விண்ணப்பப் படிவத்தை தொழிலாளா்கள் பூா்த்தி செய்து கொடுத்தால் பணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 23 தொழிலாளா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இன்று முதல் ஊதியம் வழங்கப்படும் என்றும், நாளை முதல் குழுக்களாக அவரவா் மின்னஞ்சலுக்கு தகவல் அனுப்பபட்டு பயிற்சி வழங்கி அதன் பிறகு பணியில் சோ்க்கப்படுவா் என்றும் சாம்சங் நிா்வாகம் சாா்பில் எழுத்துபூா்வமாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சாம்சங் ஊழியா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். சனிக்கிழமை (மாா்ச் 8) முதல் பணிக்குத் திரும்ப தொழிலாளா்கள் முடிவு செய்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com