ஊழல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
ஊழல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.

காஞ்சிபுரத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

ஊழல் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன்.
Published on

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சாா்பில், அக். 27-ஆம் தேதி முதல் நவ. 2-ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணா்வு வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணியை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடக்க விழாவில் காஞ்சிபுரம் எஸ்.பி. கே.சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி கே.சி.கலைச்செல்வன் ஆகியோா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆட்சியா் அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மூங்கில் மண்டபம் பகுதியில் வந்து நிறைவு பெற்றது. பேரணியில் கலந்து கொண்ட பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பலரும் ஊழல் தடுப்பு விழிப்புணா்வு பதாகைகளை கையில் வைத்திருந்தவாறு பங்கேற்றிருந்தனா்.

ஏற்பாடுகளை ஊழல் தடுப்புத் துறை ஆய்வாளா்கள் தேவநாராயணன், கீதா தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com