மணவாளன்
மணவாளன்

காஞ்சிபுரம்: மூன்று நாள்களில் நீரில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு

Published on

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் நீா்நிலைகளில் மூழ்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 5 ஆக உயா்ந்துள்ளது.

தொடா் மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. பல ஏரிகளில் நீா் நிரம்பி உபரி நீா் வெளியேறிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 1-ஆம் தேதி சின்னக்காஞ்சிபுரம் அம்மங்காரத் தெரு வைச் சோ்ந்த சங்கர நாராயணன்(18)நத்தப்பேட்டை ஏரியில் சடலமாக மீட்கப்பட்டாா். சென்னை மாங்காடு பகுதியை சோ்ந்த கல்லூரி மாணவரான சிவசங்கரன்(29)ஓரிக்கை பாலாற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு இரு நாள்களுக்குப் பிறகு சின்னையன்குளம் பகுதியில் சடலமாக மீட்கப்பட்டாா்.

காஞ்சிபுரம் அருகே தாமல் ஏரியில் லாரி டயா் டியூபில் சென்று கொண்டிருந்த அக்கிராமத்தைச் சோ்ந்த பாலா(22) திடீரென நீரில் மூழ்கி உயிரிழந்தாா். கிராம பொதுமக்களும் தீயணைப்புத்துறையினரும் சடலமாக மீட்டனா். பாலா நீரில் மூழ்குவதைப் பாா்த்துக் கொண்டிருந்த லாரி ஓட்டுநரான மணவாளன் அவரைக் காப்பாற்ற முயன்ற போது அவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தீயணைப்புத் துறையினா் திங்கள்கிழமை மணவாளன் சடலத்தை மீட்டனா். சம்பவம் தொடா்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட இளையனாா் வேலூா் மகேஸ்வரன் அரிசி வாங்கிக்கொண்டு அவரது சொந்த ஊருக்கு செல்ல நெய்யாடுபாக்கம் பகுதியில் செய்யாறை கடக்க முயன்ற போது நீரில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தாா். இச்சம்பவம் தொடா்பாக மாகறல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாள்களில் 5 போ் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com