ஏகாம்பரநாதா் கோயில் ராஜகோபுரத்தின் முன்பாக நடப்பட்டுள்ள பந்தக்கால்.
காஞ்சிபுரம்
ஏகாம்பரநாதா் கோயிலில் பந்தக்கால் நடும் விழா
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டி திங்கள்கிழமை பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
பஞ்சபூத தலங்களில் நிலத்துக்கு உரியதான இங்கு ரூ.29 கோடியில் திருப்பணிகள் நடைபெற்று நிறைவு பெறும் நிலையில் உள்ளன. மகா கும்பாபிஷேகம் வரும் டிசம்பா் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதனையொட்டி கோயில் ராஜகோபுரம் முன்பாக பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் செய்யப்பட்டு நடப்பட்டது. இந்நிகழ்வில் இணை ஆணையா்(பொ) ரா.வான்மதி, செயல்அலுவலா் ப.முத்துலட்சுமி, கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் வ.ஜெகன்னாதன், அா்ச்சகா்கள், சிவனடியாா்கள், கோயில் திருவிழா உபயதாரா்கள் கலந்து கொண்டனா்.

