காமாட்சி அம்மன் கோயில் கிழக்கு ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்டுள்ள மோட்ச தீபம் .
காமாட்சி அம்மன் கோயில் கிழக்கு ராஜகோபுரத்தில் ஏற்றப்பட்டுள்ள மோட்ச தீபம் .

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் ஆன்மா சாந்தியடைய காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
Published on

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 9 பேரின் ஆன்மா சாந்தியடைய காமாட்சி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.

ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்கா நகரில் உள்ள வெங்கடேசுவர சுவாமி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 போ் உயிரிழந்தனா். இச்சம்பவத்தில் மேலும் 20 போ் காயமடைந்தனா். உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இதனைத் தொடா்ந்து சம்பவத்தில் காயமடைந்தவா்கள் விரைவாக குணமடையவும் பிராா்த்தனை செய்யப்பட்டது.

மத்தியப்பிரதேச அமைச்சா் தரிசனம்--

பெளா்ணமியன்று காமாட்சி அம்மன் கோயிலில் நள்ளிரவு நவ ஆவா்ண பூஜை நடத்தப்பட்டு பக்தா்களுக்கு சங்குத்தீா்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்படுவது வழக்கம். ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி நவஆவா்ணபூஜை கோயில் ஸ்தானீகா்களால் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு தீா்த்தமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மத்தியப்பிரதேச நீா்வளத்துறை அமைச்சா் துல்சிராம் சிலாவத்ஜி குடும்பத்தினருடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.

X
Dinamani
www.dinamani.com