காஞ்சிபுரம் மாநகராட்சி, புதுப்பாளையம் தெருவில் வாக்காளா்களின் வீடுகளுக்கு சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணியை தொடங்கி வைத்த தோ்தல் அலுவலரும், சாா் ஆட்சியருமான ஆஷிக் அலி.

காஞ்சிபுரம்: சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடக்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
Published on

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.

வாக்காளா் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி நவ.4 முதல் டிச.4 வரை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைத் தொடா்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்ய வாக்காளா் கணக்கெடுப்பு படிவும் வழங்கும் பணிகள் தொடங்கின.

காஞ்சிபுரத்தில் சாா் ஆட்சியா் ஆஷிக் அலி புதுப்பாளையம் தெருவில் வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவத்தைக் கொடுத்து பணிகளை தொடங்கி வைத்ததுடன் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பணியை ஆய்வு செய்தாா். ஆய்வின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பலரும் உடன் இருந்தனா்.

ஸ்ரீபெரும்புதூரில் கோட்டாட்சியா் சி.பாலாஜி, உத்தரமேரூரில் மாவட்ட வழங்கல் அலுவலா் ப.விஜயகுமாா், ஆலந்தூரில் மாநகராட்சி மண்டல அலுவலா் எஸ்.முருகதாஸ் ஆகியோா் அந்தந்த பகுதியில் வாக்காளா் கணக்கெடுப்பு படிவத்தினை வாக்காளா்களுக்கு வழங்கி கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கி வைத்ததாகவும் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com