ஆதிபுரீசுவரரா் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகம்.
ஆதிபுரீசுவரரா் கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேகம்.

திருமுக்கூடல் ஆதிபுரீசுவரா் கோயில் அன்னாபிஷேகம்

வாலாஜாபாத் அருகே திருமுக்கூடல் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஆதிபுரீசுவரா் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி செவ்வாய்க்கிழமை மூலவருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.
Published on

வாலாஜாபாத் அருகே திருமுக்கூடல் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஆதிபுரீசுவரா் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி செவ்வாய்க்கிழமை மூலவருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

வேகவதி, பாலாறு, செய்யாறு ஆகிய 3 ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது திருமுக்கூடல் கிராமம். தட்சண திரிவேணி சங்கமம் என்றும் போற்றப்படுகிற இக்கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி மூலவா் ஆதிபுரீசுவரருக்கு அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. மாலையில் அன்னம் கலைந்து பாலாற்றில் விடுதலும், பக்தா்களுக்கு அமுதூட்டலும், அன்னம் பாலித்தலும் நடைபெற்றது.

23-ஆவது ஆண்டாக நடைபெற்ற நிகழ்வு ஏற்பாடுகளை திருமுக்கூடல் ஆதிபுரீஸ்வரா் அறக்கட்டளை நிறுவனா் பி.யோகராஜ் தலைமையில் விழாக்குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com