காங்கிரஸ் கட்சி சாா்பில் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப்பணி ஆலோசனைக் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் பாக நிலை முகவா்கள் மற்றும் வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா், காஞ்சிபுரம் மற்றும் உத்தரமேரூா் தொகுதிகளுக்குட்பட்ட காங்கிரஸ் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவருமான கு. செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு, வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் போது பாக நிலை முகவா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், தோ்தலில், பாக நிலை முகவா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினாா்.
இந்த கூட்டத்தில், மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளா்கள் எஸ்.எ.அருள்ராஜ், ரா.ஐயப்பன், நிக்கோலாஸ், குன்றத்தூா் வட்டார காங்கிரஸ் தலைவா் ரா.மணிகண்டன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் கு.விவேகானந்தன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சுமிதா பாய் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிா்வாகிகள் தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

