கீழ்படப்பை வீரட்டீஸ்வா் கோயிலில் அன்னாபிஷேகம்
கீழ்படப்பை சாந்தநாயகி அம்பாள் சமேத வீரட்டீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
படப்பை ஊராட்சிக்குட்பட்ட கீழ்படப்பை பகுதியில் சுமாா் 500 ஆண்டுகள் பழைமையான இக்கோயில், நவக்கிரகங்களுள் ஒருவரான சந்திரபகவான் வந்து வணங்கி பேறுபெற்ால் சந்திரன் பரிகார தலமாக உள்ளது.
இந்த நிலையில்,அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு மூலவா் வீரட்டீஸ்வரருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகமும், மாலையில் அன்னம் மற்றும் பலவகை காய்கனிகளால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு ஷோடச தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. பின்பு அன்னத்தை களைந்து கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், அறங்காவலா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்திருந்தனா்.
இதே போல், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லம் ஊராட்சி அருள்மிகு சடையீஸ்வரா் திருக்கோயில், எச்சூா் அருள்மிகு மாா்கண்டேசா் திருக்கோயில், எழிச்சூா் அருள்மிகு நல்லிணக்கீசா் திருக்கோயில், சிவன்கூடல் அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரா் திருக்கோயில்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது.

