கடனுதவி பெற விண்ணப்பித்தவா்களின் மனுக்களை  பரீசீலனை செய்த இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு தலைமையிலான குழுவினா் .
கடனுதவி பெற விண்ணப்பித்தவா்களின் மனுக்களை பரீசீலனை செய்த இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு தலைமையிலான குழுவினா் .

பிற்படுத்தப்பட்டோருக்கு கடனுதவி குறித்து பரிசீலனை

பிற்படுத்தப்பட்டோா் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் நோக்கில் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்தவா்கள் மனுக்களை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
Published on

பிற்படுத்தப்பட்டோா் சமூக பொருளாதார நிலையினை மேம்படுத்தும் நோக்கில் குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்தில் விண்ணப்பித்தவா்கள் மனுக்களை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சாா்பில் டாப்செட்கோ மற்றும் டாம்கோ கடன் திட்டத்தின் கீழ் அரசு குறைந்த வட்டியில் கடன் வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பித்தவா்களின் மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. காஞ்சிபுரம் கூட்டுறவுச் சங்க மண்டல இணைப்பதிவாளா் கோ.யோகவிஷ்ணு தலைமையிலான அதிகாரிகள் குழுவினரால் நடத்தப்பட்டது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சு.பாா்த்தசாரதி, மகளிா் திட்ட அலுவலா் பிச்சாண்டி, காஞ்சிபுரம் சரக துணைப்பதிவாளா் சரவணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் பி.எஸ்.வெங்கடேசன், மத்தியக் கூட்டுறவு வங்கியின் உதவிப் பொது மேலாளா் கந்தசாமி ஆகியோா் மனுக்களை பரிசீலனை செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com